டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

நெல்லிக்குப்பம் : போதையில் லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் போதையில் பைக்கில் வந்னர்.

அப்போது அவ்வழியே வந்த லாரியை வழிமறித்து நிறுத்தி ஏன் வேகமாக வருகிறாய் எனக் கேட்டு டிரைவரை தாக்கினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து போதையில் தகராறு செய்த மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் சுகன்வேல்,23; கபிலன் மகன் ரங்கீஸ்வரன்,23; 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தார்.

Advertisement