அவெனிஸ், பர்க்மேன் ஸ்கூட்டர் சுசூகியின் '125 ட்வின்ஸ்'

'சுசூகி மோட்டார் சைக்கில்ஸ்' நிறுவனம், அதன் 'பர்க்மேன்' மற்றும் 'அவெனிஸ்' ஆகிய இரு ஸ்கூட்டர்களை புதுப்பித்து அறிமுகம் செய்துள்ளது. 'ஒ.பி.டி., 2பி' உமிழ்வு விதிமுறைக்கு இரு ஸ்கூட்டர் இன்ஜின்களும் மேம்படுத்தப்பட்டு, புதிய நிறங்களில் வந்துள்ளன.

பர்க்மேன்



இந்த ஸ்கூட்டர், 'ஸ்ட்ரீட்' மற்றும் 'ஸ்ட்ரீட் இ.எக்ஸ்.,' என இரு மாடல்களில் வருகிறது. 'ஸ்ட்ரீட்' மாடல் ஏழு நிறங்களிலும், 'ஸ்ட்ரீட் இ.எக்ஸ்.,' மாடல் மூன்று நிறங்களிலும் வந்துள்ளன. 'ஸ்ட்ரீட் இ.எக்ஸ்.,' மாடலுக்கு, 12 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலைரூ. 95,800 - 1.16 லட்சம்

அவெனிஸ்



இந்த ஸ்கூட்டர், 'ஸ்டாண்டர்ட்' மற்றும் 'ஸ்பெஷல் எடிஷன்' என இரு மாடல்களில் வருகிறது. 'ஸ்டாண்டர்ட்' மாடல் நான்கு நிறங்களிலும், 'ஸ்பெஷல் எடிஷன்' இரண்டு நிறங்களிலும் வந்துள்ளன. இதில், 124 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

விலை ரூ. 93,200 - 93,000


விபரக்குறிப்பு



இன்ஜின் - 124.3 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு

பவர் 8.5 ஹெச்.பி.,

டார்க் 10 என்.எம்.,

Advertisement