கிளாசிக் 650 ராயல் என்பீல்டு 'ஹெவி வெயிட்டு'

'ராயல் என்பீல்டு' நிறுவனம், 'கிளாசிக் 650' என்ற க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தின் 650 சி.சி., பிரிவில், இது ஐந்தாவது பைக் ஆகும். முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், வினியோகம் ஏப்ரல் முதல் துவங்குகிறது.
இந்த பைக், இந்நிறுவனத்தின் அதிக எடை கொண்ட பைக்காகும். இதன் எடை, ஷாட்கன் 650 பைக்கை விட 3 கிலோ அதிகமாக, 243 கிலோவில் உள்ளது.
இதில் உள்ள சேசிஸ், சஸ்பென்ஷன், இன்ஜின் ஆகியவை ஷாட்கன் பைக்கில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்நிறுவனத்தின் 650 சி.சி., அணிவகுப்பில் பயன்படுத்தப்படும், அதே 648 சி.சி., ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் தான் இதிலும் வருகிறது.
கிளாசிக் 350 பைக்கை போன்ற ரெட்ரோ டிசைனில் வரும் இந்த பைக்கில், குரோம் அலங்காரங்கள், 19 மற்றும் 18 அங்குல ஸ்போக் சக்கரங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால், அலாய் சக்கரங்கள் மற்றும் டியூப் லெஸ் டயர்கள் வருவதாக எந்த தகவலும் இல்லை. சீட் உயரம் 800 எம்.எம்., பெட்ரோல் டேங்க், 14.7 லிட்டர், கிரவுண்ட் கிளியரன்ஸ் 154 எம்.எம்.,மாக உள்ளது. 6 - ஸ்பீடு சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் புதிதாக வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொறுத்த வரை, செமி அனலாக் டிஸ்ப்ளே, நேவிகேஷன் பாட் டிஸ்ப்ளே, யூ.எஸ்.பி., 'சி- போர்ட்' ஆகியவை உள்ளன. இந்த பைக், ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
டீலர்: VELAVAN MOTORS - 72002 15091
இன்ஜின் - 648 சி.சி., ட்வின் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு
பவர் 47 ஹெச்.பி.,
டார்க் 52.3 என்.எம்.,
பெட்ரோல் டேங்க் 243 கிலோ
மேலும்
-
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
-
மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
-
நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம்; 'அம்மா' உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு உணவு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
-
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி
-
கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை