பிளஸ் டூ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 23 பேர் மீது வழக்கு

வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் 12 ஆம் வகுப்பு மாணவியை, 7 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உ.பி. மாநிலம் வாரணாசியை சேர்ந்த ஒரு பிளஸ் டூ மாணவி, கடந்த மார்ச் அன்று பிஷாச்மோச்சன் பகுதியில் உள்ள ஹூக்கா பாருக்கு நண்பருடன் சென்றுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர் அளித்த புகார் அடிப்படையில், 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட பெண் விளையாட்டு குறித்த பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்காக தயாராகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இங்குள்ள ஒரு கல்லுாரியில் ஓட்டப் பயிற்சிக்காக தவறாமல் சென்று வந்துள்ளார்.
கடந்த மார்ச்-29 அன்று, ஒரு நண்பர், அந்த பெண்ணை பிஷாச்மோச்சன் பகுதியில் உள்ள ஒரு ஹூக்கா பாருக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுடன் மேலும் சிலர் சேர்ந்து கொண்டு, அந்த மாணவிக்கு, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்தனர். அதை தொடர்ந்து அந்த மாணவியை சிக்ரா பகுதியில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
புகாரின் அடிப்படையில், 23 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 11 பேர் அடையாளம் காணப்படவில்லை. மற்றவர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும்
-
ஹிந்து மதத்தினரை யாரும் சங்கடப்படுத்தாதீர்: திருமாவளவன்
-
உதயநிதிக்காக போடப்பட்ட விழா மேடை - பந்தல் பிரிப்பு
-
திருச்சி டி.ஐ.ஜி.,யின் அவதுாறு வழக்கு; சீமானுக்கு நீதிமன்றம் ஒருநாள் கெடு
-
தமிழகத்தின் நம்பர் ஒன் துரோகி; பழனிசாமியை விமர்சிக்கும் ரகுபதி
-
மோடி சொன்னால் கிணற்றிலும் குதிப்பதாக அண்ணாமலை பேட்டி
-
அண்ணாமலை - சீமான் பரஸ்பரம் புகழாரம்; கூட்டணிக்கு அச்சாரமா என சந்தேகம்