பணத்தை திருப்பி தராத பெயின்டருக்கு கத்திக்குத்து

கிண்டி, வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் மோகன், 37; பெயின்டர். இவர், சில மாதங்களுக்கு முன், ஆதம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு, 24, என்பவரிடம், 3,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

நேற்று முன்தினம், நண்பர்களுடன் சென்ற சந்துரு, பணத்தை திருப்பி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், மோகனை கத்தியால் குத்தினார். நண்பர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

கிண்டி போலீசார், நேற்று சந்துரு உள்ளிட்ட, 4 பேரை கைது செய்தனர்.

Advertisement