தேசிய நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்

சென்னை, ஆந்திர மாநிலத்தில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில், நான்கு தங்கம், ஒரு வெள்ளி என, ஐந்து பதக்கங்கள் பெற்று, எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள கே.எல்., பல்கலை சார்பில், நிறுவனர் கோனெரு லட்சுமய்யா நினைவுக் கோப்பைக்கான, தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த மார்ச் 29, 30ல், பல்கலை நீச்சல் குளத்தில் நடந்தன.
தேசிய அளவிலான, பொறியியல் கல்லூரிகள் இடையே நடந்த இப்போட்டியில், 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதில், ஆண்கள், 100 மீ., பட்டர்பிளை, 100 மீ., பிரீஸ்டைல் ஆகிய போட்டிகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் சரண் தங்கம் வென்றார். பெண்கள், 100 மீ., பிரீஸ்டைல் போட்டியில், ரக் ஷனா, அர்ச்சனா முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் ரிலே 4x100 மீ., போட்டியில், மோனிஷ் குமார், ஜெய சூர்யா, சிவஹரி, சரண் கூட்டணி தங்கம் வென்றது.
ஒட்டுமொத்த வெற்றி அடிப்படையில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்