வரப்பட்டிக்கு அடிப்படை வசதிதேவை: மா.கம்யூ.,வினர் மனு



வரப்பட்டிக்கு அடிப்படை வசதிதேவை: மா.கம்யூ.,வினர் மனு

கரூர்:வரப்பட்டி கிராமத்தில், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, மா.கம்யூ., கட்சியினர், வாழ்காட்டுபுதுார் கிளை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சென்று, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராம பஞ்., வரப்பட்டி கிராமத்தில் இந்திரா காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து
வருகின்றனர். அந்த பகுதியில், தார் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இரவு மற்றும் மாலை நேரங்களில் பஸ் வசதி செய்து தர வேண்டும். கழிப்பிடம்
கட்டித்தர வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement