மஞ்சள் காமாலை பாதிப்பு உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மஞ்சள் காமாலை நோயால் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பாதிப்பிற்குள்ளாகி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்துார்பேட்டை தாலுகா, எடைக்கல் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அமுதன், 13; செந்தில்குமார் மகள் பூமிகா, 12; வெங்கடேசன் மகன் கவி, 10; கிருஷ்ணமூர்த்தி மகன் விஷ்வா, 13; வெங்கடேசன் மகள் மகாலட்சுமி, 9; ஏழுமலை மகள் கனிஷ்கா, 15; சஞ்சீவ் மகள் காவியா, 12; ஞானவேல் மகன் கதிர்வேல், 14; செல்வேந்திரன் மகள் சஹானா, 10; பாண்டியன் மகள் நிவாஷினி, 13; உள்ளிட்ட பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனாலும் தொடர்ந்து அந்த பகுதியில் பலர் மஞ்சள் காமாலையால் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் சுகாதாரத்துறையினர் உடனடியாக அங்கு முகாமிட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement