ஒரு போன் போதுமே

பெயர் பலகை வேண்டும்
மதுரை தாய் மூகாம்பிகை நகரில் தெருக்களின் பெயர் பலகை இல்லாததால் தபால், சிலிண்டர் விநியோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னை குறித்து பேசியும் பலனில்லை. நிரந்தர பெயர் வைப்பதுடன், தெருக்களிலும் பலகை வைக்கவேண்டுகிறோம்.
-கணேசன், பாண்டிகோவில்.
குப்பையை எடுங்க
மதுரை கூடல் நகர் அண்ணா தெருவில் குடியிருப்போர் 10 நாட்களுக்கு முன்பாக வீட்டை காலி செய்தனர். அவர்கள் விட்டுச் சென்ற குப்பைஇன்னும் அகற்றப்படவில்லை. காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டியூப்லைட்கள் உள்ளன. அதன் துகள்கள் சிதறிக்கிடக்கிறது. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீதேவி, கூடல் நகர்.
கழிவுநீர் தேக்கம்
மதுரை எஸ்.எஸ். காலனி, பைபாஸ் ரோடு, சர்வீஸ் ரோட்டில் உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. வாகனஓட்டிகள் தடுமாறுகின்றனர். கழிவுநீர் அடைப்பை சரிசெய்து, ரோட்டை சீரமைக்க வேண்டும். மாநகராட்சியினர் துரிது படுத்தவேண்டும்.
-கிருஷ்ணகுமார், எஸ்.எஸ். காலனி.
ரோடாய்யா இது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் முதல் பாரதியார் ரோடு வரை ரோடு மிகவும் மோசமாக உள்ளது. வாகனங்கள் செல்ல ஏற்றதாக இல்லை. கடந்த ஒரு மாத காலமாக மக்கள் அதிகம் பாதித்துள்ளனர். மாநகராட்சி விரைந்து நடடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமலட்சுமி, ஜெய்ஹிந்த்புரம்.
குப்பையால் அவதி
மதுரை அய்யர்பங்களா உச்சபரம்புமேடு இணைப்பு ரோட்டோரம் வைத்துள்ள தொட்டிகளில் முறையாக குப்பையை அகற்றுவதில்லை. இதனால் அவை ரோடு வரை சிதறி கிடந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களும் பொறுப்பின்றி குப்பையை ரோட்டில் வீசிச் செல்கின்றனர். குப்பையை முறையாக அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முன்வரவேண்டும்.
-ராஜன்பாபு, உச்சபரம்புமேடு.
எரியாத விளக்குகள்
மதுரை நரிமேடு சர்ச் திருப்பத்தில் ரோட்டிலுள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இருள் சூழ்ந்துள்ளதால் வழிப்பறி அடிக்கடி நடக்கிறது. இப்பகுதியில் தெரு விளக்குகளை கூடுதலாக அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
-செல்வம், செல்லுார்.
ரோட்டில் ஓடும் கழிவுநீர்
மதுரை அருள்தாஸ்புரம் அசோக்நகர் 4வது மேற்கு தெருவில் பாதாளாச்சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. ரோட்டின் சமதளத்திற்கு பாதாள சாக்கடை மூடியை உயர்த்த வேண்டும். மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கணேஷ், அசோக்நகர்.
* பஸ் ஸ்டாண்ட் அருகில் கழிவுநீர்
மதுரை கூடல்நகர் மெயின் ரோட்டில் பாதாளச்சாக்கடை மூடிகள் உடைந்து ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது. துர்நாற்றத்துடன் நோய்பரவும் அபாயம் அதிகம். அதிக மக்கள் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்ட் அருகில் கழிவு நீர் வெளியேறுவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
- - தினேஷ், கூடல்நகர்.
மேடு, பள்ளமான ரோடுகள்
மதுரை 49வது வார்டு ஓபுளா படித்துறை ரோடு மேடு, பள்ளமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய ரோட்டில் டிரை சைக்கிள்கள் ஆக்கிரமித்துள்ளது. அப்புறப்படுத்தி ரோட்டை புதிதாக அமைக்க வேண்டும்.
-- நீலகண்டன், கீழவாசல்.
செயல்பாடற்ற கழிப்பறை
மதுரை வார்டு 22 பழைய விளாங்குடி ரோட்டில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி பொது கழிப்பறை செயல்படாமல் முட்செடிகள் வளர்ந்துள்ளது. மிகவும் மோசமான நிலையில் பாழைடைந்து, பயனற்று உள்ள கட்டடத்தினை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும்.
- - மனோகரன், செங்கோல் நகர்.