ஆரோக்கியம் தரும் பழங்கள்

பழங்களைச் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழங்களில் உள்ள சில சத்துகளைத் தனியாகப் பிரித்து அவற்றை மருந்தாகப் பயன்படுத்த முடியும். அவற்றுக்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், பிரேசில் நாட்டில், உள்ள எஸ்.ஓ.ஆர்.சி., என்கின்ற ஆய்வு மையம் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு வாயிலாக, பலவிதமான நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த நார்ச்சத்து பழங்கள் காய்கறிகளின் செல் சுவர்களில் நிறைந்துள்ளன. பப்பாளிப்பழம், தாட் பூட் எனப்படுகின்ற பேஷன் பழம், ஆரஞ்சு ஆகியவற்றில் இந்தச் சத்து அதிகமாக இருக்கிறது.
பப்பாளிப்பழம் பழுப்பதற்கு முன்பாக இந்த நார்ச்சத்து அதில் அதிக அளவில் இருக்கும். பழுத்துவிட்டால் இதனுடைய தன்மை மாறிவிடும். எனவே ஆய்வாளர்கள் பப்பாளியை விடுத்து ஆரஞ்சு, பேஷன் பழங்களை எடுத்துக் கொண்டார்கள். அவற்றின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும் இடையே இருக்கின்ற வெள்ளைப் பகுதியில் பெக்டின் நிறைந்துள்ளது.
இதை விலங்குகள் மீது பரிசோதித்தபோது, அவற்றின் உடலில் நல்ல மாற்றம் தெரிந்தது. வருங்காலத்தில் குடல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக ஆரஞ்சு முதலிய பழங்களில் சாறு எடுக்கும்போது சதைப் பகுதி வீணாகத் துாக்கி எறியப்படுகிறது. இதிலிருந்து பெக்டின் நிறைந்த வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து மாவு போல் செய்யலாம்.
எனவே மருந்தாக மட்டும் இன்றி, இன்று நாம் பயன்படுத்துகின்ற புரோட்டின் பவுடர் போல் இந்த பெக்டின் மாவைப் பயன்படுத்த முடியும்.
மேலும்
-
வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்
-
கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை
-
சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா
-
காங்., சிறுபான்மை அணியினர் ஆர்ப்பாட்டம்
-
புல்லுக்காடு பகுதியில் தீ விபத்து
-
போட்டா - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்