இருண்டு கிடக்கும் வேப்பூர் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளுடன் செயல்பட நடவடிக்கை தேவை

விக்கிரவாண்டி : வேப்பூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து, பஸ்கள் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் மாவட்டம், நல்லுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் பஸ் நிலையம் கடந்த 2019-20ம் ஆண்டில், 2 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில், 7 கடைகள் மற்றும் கழிப்பிட வசதியுடன் கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது.
இந்த பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. பகல் நேரங்களில் ஒரு சில பஸ்கள் மட்டும் உள்ளே வந்து செல்கின்றன.
பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு இதுவரை டெண்டர் விடவில்லை. பஸ் நிலைய கழிவறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. பஸ் நிலையத்தின் உள்ளே தனி நபர் கழிப்பறை கட்டி கட்டணம் வசூல் செய்து வருகிறார்.
பஸ் நிலையத்தில் ஹைமாஸ் விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருண்டு கிடக்கிறது. இது, சமூக விரோத செயல்களுக்கு பாதுகாப்பான இடமாக அமைந்துவிட்டது.
தற்போது வேப்பூரில் கட்டப்பட்ட மேம்பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, வேப்பூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை டெண்டர் விட்டு, பஸ் நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
ஓய்வு கிடைப்பதால் பீட் ஆபீசர்கள் நிம்மதி! ஷிப்ட் அடிப்படையில் போலீசாருக்கு பணி
-
செம்மொழி பூங்காவுக்குள் என்ன நடக்குது; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
-
வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்
-
கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை
-
சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா