ஒப்பந்த ஆசிரியர்கள் 2ம் நாளாக போராட்டம்

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக நேற்று கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு கல்வித்துறையில் கடந்த 2021ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பாலசேவிகா ஆசிரியர்கள் என 4 பிரிவுகளில் 288 பேர் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.

அவர்களது ஒப்பந்த பணிக்காலம் கடந்த 31ம் தேதி முடிந்தது.ஆனால், அவர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

இதனால், நேற்று முன்தினம் ஒப்பந்த ஆசிரியர்கள் மாதா கோவில் அருகே பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.

தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாள் கொட்டும் மழையில் ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், எதிர்கட்சித் தலைவர் சிவா, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement