கல்லுாரி ஆண்டு விழா: மாணவர்களுக்கு பரிசு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு கலை கல்லூரியில் 30 ம் ஆண்டு விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

கல்லூரியின் வளாகத்தில் நேற்று நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ெஹன்னா மோனிஷா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரான சபாநாயகர் செல்வம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார்.

கல்லூரி முன்னாள் முதல்வர் ராதாக்கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியை ரேவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், பேராசிரியர் ஞானாம்பிகை உட்பட பேராசிரியர்கள், கல்லுாரி ஊழியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

ஆங்கிலத் துறைத் தலைவர் அருளரசி நன்றி கூறினார்.

Advertisement