சுற்றுச்சூழல் கருத்தரங்கம்  

திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, தேசிய பசுமைப்படை, 'இக்கோ' கிளப் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் லட்சுமிபிரபா தலைமை வகித்தார்.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமார் முன்னிலை வகித்தார். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திலீப்குமார் பேசினார். கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி வளாகத்தில் துவங்கிய மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் கல்லாங்காட்டில் நிறைவடைந்தது.

Advertisement