பெங்களூரு சிறப்பு ரயில்  

பயணிகள் கூட்ட நெரிசல் மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரிப்பதால், பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே இன்று முதல் சிறப்பு ரயில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு, 11:00 மணிக்கு பெங்களூருவில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06555), நாளை மதியம், 2:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ஸ்டேஷன் சென்றடையும்.

திருப்பூருக்கு, சனிக்கிழமை அதிகாலை 4:03க்கு இந்த ரயில் வரும். இன்று முதல் வரும், மே, 30ம் தேதி வரை வெள்ளிதோறும் இந்த ரயில் இயங்கும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ஸ்டேஷனில் இருந்து, ஏப்ரல், 6 முதல் ஜூன், 1 வரை சிறப்பு ரயில் ஞாயிறு தோறும் இயக்கப்படும். மதியம், 2:15க்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில் (எண்:06556) மறுநாள் காலை 7:30க்கு பெங்களூரு சென்று சேரும். திருப்பூரை இந்த ரயில், ஞாயிறுதோறும் இரவு 11:55க்கு கடக்கும்.

Advertisement