போலீஸ் டைரி

பீஹார் வாலிபர் பலி



பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் தாஸ், 45. திருப்பூர் காந்தி நகரில் தங்கி, அம்மாபாளையம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரண்டாவது தளத்தில் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். சுற்றுச்சுவர் மீதுள்ள கம்பி குத்தி படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறந்தார். வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

4 வாலிபர்கள் கைது



முதலிபாளையத்தை சேர்ந்த, 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோட்டில் நடந்து சென்றார். டூவீலரில் வந்த, நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுவனை தாக்கி, கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்து சென்றது. ஊத்துக்குளி போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக ஊத்துக்குளியை சேர்ந்த அஜய், 19, நித்திஷ்குமார், 18, கதிர்வேல், 23, அன்புசெல்வன், 22 என, நான்கு பேரை கைது செய்தனர்.

ஆசிரியையிடம் நகை பறிப்பு



ஈரோடு, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கல்பனா, 39; தனியார் பள்ளி ஆசிரியர். ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு பஸ்சில் வந்தார். பஸ்சில் இருந்து இறங்கும் போது, கல்பனா அணிந்திருந்த, 4.5 சவரன் நகையை காணவில்லை. பஸ்சில் யாரோ நகையை பறித்து சென்றது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement