கரூரில் த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்


கரூரில் த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்


கரூர்:கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், லோக்சபாவில் வக்ப் வாரியம் திருத்த சட்டத்தை நிறைவேற்றிய, மத்திய அரசை கண்டித்தும், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள, வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இணை செயலாளர் விக்னேஷ்வரன், பொருளாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் விஜய பிரகாஷ், பாரத் உள்பட பலர் பங்கேற்றனர்.
* குளித்தலையில், காந்தி சிலை எதிரில், கரூர் கிழக்கு மாவட்டம் த.வெ.க., சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். குளித்தலை நகர பொறுப்பாளர்கள் விஜய், வாலாந்துார் காமராஜ், முரளி, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வக்பு திருத்த சட்ட மசோதவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Advertisement