அரசு தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு



அரசு தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு


தர்மபுரி:கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்கிய, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாராட்டினார்.
தர்மபுரி அருகே, குப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட சித்தன் கொட்டாயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, 100 நாள் சேலஞ்ச், 100 சதவீதம் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படை திறன் மதிப்பீட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தர்மபுரி வட்டார கல்வி அலுவலர் நாசர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் பானுரேகா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி, இடைநிலை ஆசிரியை அஜிதா ஆகியோர் முன்னிலையில் மதிப்பீடு நடந்தது.
மாணவர்களுடைய கற்றல் திறனாய்வு சோதிக்கப்பட்டதில், மாணவர்கள் சிறந்த முறையில் வாசித்து காட்டினர். இதில், பங்கேற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாராட்டினார்.
இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவி அன்புமணி, துணைத்தலைவி ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement