ராஜயோக தியான நிலையத்தில் நாளை சிறப்பு தியான முகாம்

விழுப்புரம்,: வளவனுாரில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில், நாளை 13ம் தேதி சிறப்பு தியான முகாம் நடக்கிறது.

வடக்கு அக்ரஹாரத்தில் நாளை 13ம் தேதி காலை 10:00 மணிக்கு தொடங்கி, மதியம் 1:00 மணி வரை இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது.

அதில், உலக பிரசித்தி பெற்ற ராஜயோக தியான பயிற்சி, வாழும் கலை, மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுதல், நேர்மறை எண்ணங்கள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த தியானத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

இத்தகவலை வளவனுார் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement