சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நடிகை சாரா அலிகான் தரிசனம்

1

ஹூப்பள்ளி : ஹூப்பள்ளியில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், பாலிவுட் நடிகை சாரா அலிகான் சாமி தரிசனம் செய்ததை, பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாய் வரவேற்றுள்ளார்.

சாளுக்கியர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில்களில், ஹூப்பள்ளியின் உனகல்லில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலும் ஒன்று.


பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.


சமீபத்தில் இக்கோவி லுக்கு, பாலிவுட் திரைப்பட நடிகர் சயிப் அலிகானின் மகளும், நடிகையுமான சாரா அலிகான் வந்திருந்தார்.


இங்கு சுவாமி தரிசனம் செய்த பின், அதன் புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதை ஹூப்பள்ளி பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாய் வரவேற்றுள்ளார்.

அவர் குறிப்பிட்டுஉள்ளதாவது:



சாளுக்கியர்களால் கட்டப்பட்ட சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்கு பாலிவுட்நடிகை சாரா அலிகான் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.


இவரை போன்ற பிரபலமானவர்கள், வரலாற்று பிரசித்தி பெற்ற இடங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும். இதனால் நம் நாட்டின் கலாசாராம், பாரம்பரியம், உலகளவில் பிரபலம் அடையும்.

அத்துடன், சுற்றுலாதலங்கள் வளர்ச்சிஅடையும்.


இவ்வாறு அதில்குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், சாரா அலி கான் எப்போது ஹூப்பள்ளி வந்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை. 'கேதார்நாத்' என்ற திரைப்படத்தில் நடித்தது முதல், நாட்டின் பல பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்.


கோவிலுக்கு செல்லும் போதெல்லாம், எந்தவித மேக் அப்பும் இல்லாமல் செல்லும் புகைப் படத்தை பதிவிட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.

Advertisement