நுகர்வு சரிந்ததால் முட்டை விலைஇரண்டு நாளில் 40 காசு குறைப்பு
நுகர்வு சரிந்ததால் முட்டை விலைஇரண்டு நாளில் 40 காசு குறைப்பு
நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், தினசரி ஐந்து கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைப்பிடிக்கின்றனர். கடந்த, 1ல், முட்டை விலை, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம், 20 காசு, நேற்று மேலும், 20 காசு குறைக்கப்பட்டு, 425 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ரம்ஜான் பண்டிகை முடிந்தவுடன் நுகர்வு சரிந்ததால், முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக, பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்:சென்னை, 495, ஐதராபாத், 400, விஜயவாடா, 430, பர்வாலா, 395, மும்பை, 480, மைசூரு, 490, பெங்களூரு, 490, கோல்கட்டா, 465, டில்லி, 415 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 118 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையை, 16 ரூபாய் குறைத்து, ஒரு கிலோ, 102 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும்
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
-
பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்
-
பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது
-
மேற்குவங்க கலவரம்: தந்தை, மகன் வெட்டிக் கொலை;110 பேர் கைது
-
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு