நரசிம்மர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
நரசிம்மர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
நாமக்கல்:நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோவிலில், வரும், 12ல் பங்குனி தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி, நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
ஒரே கல்லில் உருவான நாமக்கல் மலையின் மேற்கில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, லட்சுமி நரசிம்மர், மூலவர் மலையை குடைந்து குடைவரை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு நேர் எதிரே, ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மலையின் கிழக்கில், அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்காநதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 'கார்க்கோடகன்' என்ற பாம்பின் மீது ரங்கநாதர் அனந்த சயன நிலையில், மலையை குடைந்து குடைவரை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பங்குனியில், இந்த மூன்று தெய்வங்களுக்கும், ஒரே நாளில் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா, வரும், 12ல் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு, நரசிம்மர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சுவாமி அன்ன வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, தினமும் காலை, 8:00 மணிக்கு ஸ்நபன திருமஞ்சனம், இரவு, 7:00 மணிக்கு, சிம்மம், அனுமந்தம், கருட, சேஷ, யானை, குதிரை என, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரும், 10 மாலை, 6:00 மணிக்கு, குளக்கரை மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதில், பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பிப்பது சிறப்பு. 12 காலை, 8:30 மணிக்கு, கோட்டையில் உள்ள நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் தேரோட்டம், மாலை, 4:30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் இளையராஜா, அலுவலர்கள் செய்துள்ளனர்.
மேலும்
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
-
பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்
-
பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது
-
மேற்குவங்க கலவரம்: தந்தை, மகன் வெட்டிக் கொலை;110 பேர் கைது
-
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு