வக்ப் வாரிய சட்டம்: த.வெ.க., ஆர்ப்பாட்டம்



வக்ப் வாரிய சட்டம்: த.வெ.க., ஆர்ப்பாட்டம்


நாமக்கல்:வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, த.வெ.க., சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். அதில், முஸ்லிம்களுக்கு எதிரான வக்ப் வாரிய மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில், நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement