தேர்த்திருவிழா கோலாகலம்
தேர்த்திருவிழா கோலாகலம்
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, பெரியமணலியில் பிரசித்திபெற்ற கரிய காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த, 18ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 26ல், கிராம சாந்தி நடந்தது. 29ல், கொடியேற்றப்பட்டது. 1 மாலை, 4:00 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், சக்தி அழைத்தல் நடந்தது. 2 காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
அன்று மாலை, 5:00 மணிக்கு, கரிய காளியம்மன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, மாரியம்மன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, நாகேஸ்வரர் திருத்தேரும், 5:00 மணிக்கு, வேணுகோபாலசுவாமி திருத்தேரும் இழுக்கப்பட்டது.இன்று இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின்விளக்கில் சத்தாபரணம் நடைபெறும். தொடர்ந்து, வாண வேடிக்கை, அம்மன் திருவீதி பவனி நடைபெறும். நாளை காலை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா முடிவடைகிறது.
மேலும்
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
-
பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்
-
பட்டா மாற்ற ரூ. 9 ஆயிரம் லஞ்சம்; திருச்செங்கோட்டில் சர்வேயர் கைது
-
மேற்குவங்க கலவரம்: தந்தை, மகன் வெட்டிக் கொலை;110 பேர் கைது
-
அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு; வெளியானது அறிவிப்பு