முடிவுற்ற சாலைப்பணிதரம் சரிபார்த்த அதிகாரி
முடிவுற்ற சாலைப்பணிதரம் சரிபார்த்த அதிகாரி
ராசிபுரம்:ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2024-25ல், ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரி முதல் சீராப்பள்ளி வரை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி நடந்து வந்தது. அதுமட்டும் இன்றி கவுண்டம்பாளையம் பகுதியில் இடைவழிப்பாதையை, இருவழிப்பாதையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணியும் முடிந்துள்ளது.
இப்பணிகள், 5.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் கதிரேஷ் ஆய்வு செய்தார். அப்போது, சாலையின் தரம் மற்றும் கனம் சரிபார்த்தார். உடன், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப்பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவிப்பொறியாளர் மணிகண்டன், நாமக்கல் தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப்பொறியாளர் தமிழரசி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
அமைச்சர்களுக்கு ரூ.2.71 கோடியில் சொகுசு கார்கள்; கேரள அரசின் தாராளம்
-
பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை: துபாய் தொடர்பு அம்பலம்
-
மளமளவென ரன் குவிக்கும் பஞ்சாப்; ஸ்ரேயாஷ் அதிவேக அரைசதம்
-
அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி