துாய்மை பணியாளர்கள்காத்திருப்பு போராட்டம்
துாய்மை பணியாளர்கள்காத்திருப்பு போராட்டம்
நாமக்கல்:நாமக்கல் மாநகராட்சியில் துாய்மை பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த அடிப்படையில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
அவர்களில், 100க்கும் மேற்பட்டோர், நேற்று பணிகளை புறக்கணித்து, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை, 7:30 மணிக்கு துவங்கிய போராட்டம், மாலை, 4:30 மணி வரை நடந்தது.
அதில், நிர்ணயிக்கப்பட்ட பி.எப்., தொகை, இ.எஸ்.ஐ., வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்த டிரைவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாநகராட்சி துணை மேயர் பூபதி, பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை: துபாய் தொடர்பு அம்பலம்
-
மளமளவென ரன் குவிக்கும் பஞ்சாப்; ஸ்ரேயாஷ் அதிவேக அரைசதம்
-
அண்ணாமலை புயல்; நான் தென்றல்: நயினார் நாகேந்திரன் பேச்சு
-
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு காலணி அணிந்தார் அண்ணாமலை
-
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி; லக்னோவுக்கு 4வது வெற்றி
-
பொன்முடியின் ஆபாச பேச்சு: கவர்னர் கண்டனம்
Advertisement
Advertisement