யானைகள் நடமாட்டத்தால் 1 மணி நேரம் மின் நிறுத்தம்

யானைகள் நடமாட்டத்தால் 1 மணி நேரம் மின் நிறுத்தம்


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கோடிப்பள்ளி மற்றும் நரணிகுப்பம் கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக, வனத்துறையினருக்கு தகவல் வந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தாழ்வான மின் கம்பிகள் அந்த பகுதியில் உள்ளதால், யானைகளுக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க, மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 10:35 மணி முதல், 11:35 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்ட பின், மின் வினியோகம் வழங்கப்பட்டது.

Advertisement