குப்பை சேகரிக்க வந்த பேட்டரி வண்டிபறவைகளின் கழிப்பறையான அவலம்


குப்பை சேகரிக்க வந்த பேட்டரி வண்டிபறவைகளின் கழிப்பறையான அவலம்


கோபி:கவுந்தப்பாடி பஞ்சாயத்தில், 15 வார்டுகளில், 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வார்டுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து எடுத்து செல்ல வசதியாக, பேட்டரியில் இயங்கும், 42 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட வாகனங்கள், பஞ்., ஆபீஸ் வளாகத்தில் பல வாரங்களாக ஓரங்கட்டி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் உதிரி பாகங்கள் களவு போகும் அபாயமும் உள்ளது. மேலும் மரத்தடியில் நிற்கும் வாகனங்களின் மீது, நுாற்றுக்கணக்கான பறவைகளின் எச்சம் விழுவதால், புத்தம் புதிய
வாகனங்கள் துர்நாற்றம் வீசும் பறவைகளின் கழிப்பறையாக காட்சியளிக்கிறது. பஞ்., நிர்வாகம் வாகனங்களை முறையாக பயன்பாட்டுக்கு அனுமதிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கவுந்தப்பாடி பஞ்., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாகன பதிவுக்கு பின், பேட்டரி குப்பை வண்டிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' என்றார்.

Advertisement