பள்ளி ஆண்டு விழா கடலுார்

மந்தாரக்குப்பம் புதுஇளவரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கரும்பாயி வீரப்பன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கார்த்தி கேயன் வரவேற்றார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், கல்வியாளர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியர் வித்யா நன்றி கூறினார்.

Advertisement