பெண்ணிடம் பஸ்சில் 8 பவுன் நகை திருட்டு

சிவகங்கை : சிவகங்கைமாவட்டம் கொல்லங்குடி வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி 40. இவர் அங்கிருந்து பஸ்சில் சிவகங்கை சென்றார். பஸ்சில் பயணித்த அடையாளம் தெரியாத சிலர் மகேஸ்வரியின் கைப்பையில் இருந்த 8 பவுன் தங்கச் செயினை திருடினர்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் அவர் இறங்கி பார்த்தபோது செயின் திருடுபோனது தெரியவந்தது. குற்றப்பிரிவு எஸ்.ஐ., தனசேகரன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement