கண்டரமாணிக்கம் சித்திரை திருவிழா ஏப்.15ல் துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.15 ல் துவங்குகிறது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஏப்.15 காலை 10:30 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் விழா துவங்குகிறது. இரவில் பூதகி வாகனத்தில் அம்பாள் பவனி வருவார்.

தொடர்ந்து தினசரி காலை 9:30 மணிக்கு அம்பாள் கேடகத்தில் புறப்பாடும், இரவு 10:00 மணிக்கு சிம்மம், அன்னம், காமதேனு, யானை, குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். ஏப்.22 காலையில் தேருக்கு அம்பாள் எழுந்தருளி தெற்குப்பட்டுக்கு வடம் பிடித்தல் நடைபெறும்.

மறுநாள் காலையில் மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பர். மாலையில் தேர் வடம் பிடித்து தேர் திரும்புதல் நடைபெறும். இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஏப்.24 காலையில் தீர்த்தவாரி, மஞ்சுவிரட்டும், இரவில் பூப்பல்லக்கில் அம்பாள் பவனி நடைபெறும்.

Advertisement