சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 15.09 அடி உயர்வு

பெரியகுளம் : சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15.09 அடி உயர்ந்தது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில்சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. வெயிலின் தாக்கத்தால் ஏப்.1ல் 65.92 அடியாகவும், ஏப்.4ல் 66.25 அடியாகவும், நீர் வரத்து குறைந்து, வினாடிக்கு 6 கன அடி மட்டுமே வந்தது.
நேற்று முன்தினம் ஏப். 4 மதியம் 12:00 மணிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி, நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு வினாடிக்கு 155.77 கன அடி நீர் வந்தது. இதனால் ஒரே நாளில் 15.09 அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சோத்துப்பாறை அணையில் 86 மி.மீ., மழையும், பெரியகுளத்தில் 61 மி.மீ., மழை பெய்ததால் வராகநதியில் தண்ணீர் செல்கிறது.
சோத்துப்பாறை அணையிலிருந்து பெரியகுளம் பகுதி குடிநீருக்கு வினாடிக்கு 3 கனஅடி வினியோகம் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு விபரம்: ஆண்டிபட்டி 43 மி.மீ., அரண்மணைப்பதுார் 30.2, வீரபாண்டி 9.4, மஞ்சளாறு 43, வைகை அணை 22.8, போடி 12.8, உத்தமபாளையம் 54.6, கூடலுார் 9.6, சண்முகாநதி 11.4 மி.மீ.,மழை பதிவானது.