சேனைக்கிழங்கு விலை உயர்வு கிலோ ரூ.43க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்,: வரத்து குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சேனைக்கிழங்கு விலை இரண்டே வாரத்தில் கிலோவிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.43 க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு உள்ளூர் பகுதி காய்கறிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் ,வெளி மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

கடந்த சில வாரமாக கரூர் மாவட்டத்தில் விளைந்த சேனைக்கிழங்கு இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

அறுவடை மும்முரமாக இருந்ததால் வரத்து அதிகமாகி கிலோ ரூ.33 க்கு விற்பனையானது. இந்நிலையில், தற்போது வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று கிலோ சேனைக்கிழங்கு ரூ.43க்கு விற்பனையானது.

கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறுகையில் 'இனி வரும் நாட்களிலும் வரத்து குறைந்தால், விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது' என்றனர்.

Advertisement