மண் வெட்டியதாக விவசாயி மீது வழக்கு வாபஸ் பெறாவிட்டால் போராட்ட எச்சரிக்கை
நாமக்கல்: விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் கலெக்டர், எஸ்.பி., ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதா-வது:
மோகனுார் தாலுகா, ஆண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவ-சாயி சுப்ரமணியன்; இவர், தோட்டத்தில் மண்ணை வெட்டி, சீர்-திருத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மாவட்ட கனிம வளத்துறை மூலம் புகாரளிக்கப்பட்டு, மோகனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாட்டின் முதுகெலும்பாக விளங்-கக்கூடிய ஒரு விவசாயி, தன்னுடைய தோட்டத்தில், தன்னுடைய சொந்த மண்ணை அவருடைய இடத்திற்கு பயன்படுத்தாமல், எப்படி விவசாயம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள முடியும்.
நாமக்கல் மாவட்டத்தில், அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், அனுமதிக்கப்படாத இடங்களிலும், கிராவல் மண் பல கோடி ரூபாய்க்கு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, கனிமவளத்துறை எவ்-வித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களிடம், 'கையூட்டு' பெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. உடனடியாக இந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும். தவறும் பட்சத்தில், அனைத்து சங்க விவசாயிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகளை திரட்டி கண்-டன ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், போராட்டம் நடத்தப்போவதாக, கொ.ம.தே.க., மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.