அரசு பஸ்கள் தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கிவைப்பு
சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ் வழித்தடம் நீட்-டிப்பு, மப்சல் பஸ் கூடுதல் நடை இயக்குவதற்கான தொடக்க விழா, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கொடிய-சைத்து இரு பஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி, மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், அரசு போக்குவரத்து கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் பாலகிருஷ்ணன், தொ.மு.ச.,
நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'சேலத்தில் இருந்து பச்சமலை வழியே இயக்கப்படும் மப்சல் பஸ், டாப்செங்காட்டுப்பட்டியில் இருந்து உப்பிலியாபுரம் வரை கூடுதலாக, 2 நடைகள், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலுார் வழியே தொளசம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ், வாழதாசம்பட்டி வரை நீட்டிக்கப்பட்டு, கூடுதலாக, 2 நடைகள் இயக்கப்படுகின்றன' என்றனர்.
மேலும்
-
வாழவந்தாள் அம்மன் பங்குனி பொங்கல் விழா
-
பக்கவாட்டு தடுப்பு சுவர் இன்றி விபத்து அபாயம்
-
கடலுாரில் உளவுத்துறை அலர்ட் எதிரொலி ; தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களுக்கு 'ஜாக்பாட்'
-
சாலையோரம் துாங்கும் லாரி டிரைவர்கள் போலீஸ் எச்சரித்தும் அலட்சியம்
-
கடலுார் சிப்காட்டில் காற்று, நீர் மாசுபாடு... அதிகரிப்பு; நோய் பரவலை தடுக்க நடவடிக்கை தேவை
-
தகுதியான தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.பி., ஆபீசில் நியமிக்கப்படுவாரா?