'இ- சேவை' விண்ணப்பம் நில அளவீடு செய்யலாம்

திருப்பூர்; தமிழக அரசு, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, நில அளவை செய்யும் வசதியை, 2023ல் அறிமுகம் செய்தது. நில உரிமையாளர்கள், https://tamilnilam.tn.gov/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி கிடைத்தது.

தற்போது, நில உரிமையாளர், தங்கள் நிலத்தை அளவீடு செய்ய, பொது 'இ-சேவை'மையத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. நில அளவீடு செய்யும் தேதி, மனுதாரர் மொபைல் எண்ணுக்கு, குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவீடு செய்த பிறகு, மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். மனுதாரர், https://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement