வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு
தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்துார் பகுதியில் குள்ளப்புரம் வேளாண் கல்லுாரியை சேர்ந்த மாணவிகள் அபிநயா, அகிலா, தீபா, இலக்கியா, கலைவாணி, மோனிஷா, பூஜாஸ்ரீ, சுபஸ்ரீ, சத்யா, திரண்யா, விஜயலட்சுமி உட்பட 11 பேர், கிராம தங்கல் திட்டத்தில் தங்கி விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் புவனேஷ்பிரபு, அருண் ஆகியோர் பன்றிகள் வளர்த்து வருகின்றனர்.அவர்களுக்கு பன்றிகளுக்கான தடுப்பூசிகள், பன்றிக்காய்ச்சல், சிர்கோ வைரஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை செலுத்தும் கால இடைவெளிகள், பராமரிப்பு தொழில்நுட்பங்கள், உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement