போர்ட் அப் டவுன் ரியல் எஸ்டேட்டில் பிளாட் வாங்கினால் பத்திரப்பதிவு இலவசம்

தேனி: தேனி பெரியகுளம் ரோடு லட்சுமிபுரத்தில் உள்ள போர்ட் அப் டவுன் வளாகத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வீட்டு மனை வாங்குவோர்களுக்கு இலவச பத்திரப்பதிவு செய்து தரப்படும் என, நிறுவன பங்குதாரர் முத்துசெந்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மக்கள் விரும்பும் வசதிகளுடனும், இயற்கை சூழலுடனும் தேவையான பொழுது போக்கு அம்சத்துடனும், இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைக்கு மையத்தில் போர்ட் அப் டவுண் பிளாட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 100 அடியில் நிலத்தடி நீர் வசதி, 30 முதல் 60 அடி கான்கீரிட் பாதையில் 100 க்கும் மேற்பட்ட சோலார் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் செக்யூரிட்டி வசதி, 50க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
உலக தரத்தில் ஸ்கேட்டிங், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கைபந்து, இறகுபந்து மைதானங்கள் அமைந்துள்ளது. உடற்பயிற்சிக் கூடம், தியான அறை, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, மீட்டிங் ஹால், மினி தியேட்டர் வசதி உட்பட வசதிகள் அமைந்துள்ளன.அனைத்து பிளாட்டுகளும் அரசு அங்கீகாரம் பெற்றது.
பிளாட் வாங்குவோர் விரும்பினால் வங்கிகளில் கடன் வசதி செய்து தரப்படும்.
இம்மாதம் முழுவதும் பிளாட் வாங்குவோர்களுக்கு இலவச பத்திரப்பதிவு செய்து தரப்படும். இன்னும் குறைந்த பிளாட்களே இருப்பதால் பொது மக்கள் இச்சலுகையை பயன்படுத்தி பயனடையலாம் என்றார்.