சாராயம் பறிமுதல் : ஒருவர் கைது

உத்தமபாளையம்: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையில் போலீசார் போடிமெட்டு முந்தலில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆம்னி வேனில் வந்த ஒருவரிடம் 7 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர் நெடுங்கண்டத்தை தேர்ந்த செரியன் 55, என்பதும் மஹாராஷ்டிராவில் இருந்து விற்பனை செய்ய 7 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

உத்தம பாளையம் மதுவிலக்கு போலீசார் செரியனை கைது செய்து விசாரிக்கின்றார்கள்.

Advertisement