கீரணிப்பட்டி பிரமோற்ஸவம்: ஏப்.14ல் தேரோட்டம்

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பிரமோற்ஸவத்தை முன்னிட்டு ஏப்.14ல் தேரோட்டம் நடக்கிறது.

இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி நித்திய கல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரமோற்ஸவம் 10 நாட்கள் நடைபெறும்.

ஏப்.6ல் இளையாத்தங்குடியிலிருந்து உற்ஸவ அம்மன் புறப்பாடாகி கீரணிப்பட்டி கோயிலில் எழுந்தருளினார்.தொடர்ந்து காப்புக்கட்டி பிரமோற்ஸவம் துவங்கி திருவீதி உலா நடந்தது.

தினசரி இரவில் வெள்ளிரிஷபம், அன்னம்,சிம்மம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஏப்.11ல் ஊஞ்சல் வைபவமும், ஏப்.12ல் புஷ்ப பல்லாக்கும், ஏப்.14ல் தேரோட்டமும் நடைபெறும். ஏப்.15 மாலையில் அம்பாள் கீரணிப்பட்டியிலிருந்து சிம்ம வாகனத்தில் இளையாத்தங்குடிக்கு திரும்புதலுடன் உற்ஸவம் நிறைவடையும்.

Advertisement