வில்வித்தை: ஜோதி 'ஐந்து'

புளோரிடா: உலக கோப்பை வில்வித்தை தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி, ஐந்தாவது இடம் பிடித்தார்.
அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) தொடர் நடக்கிறது. காம்பவுண்டு பெண்கள் தனிநபர் பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் ஜோதி, 691 புள்ளி எடுத்து ஐந்தாவது இடம் பிடித்தார்.
காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி, 1389 புள்ளியுடன் ஐந்தாவது இடம் பிடித்தது. காலிறுதியில் நாளை ஸ்பெயினை சந்திக்க உள்ளது.
ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், 11 (698), அபிஷேக் வர்மா, 13 (697), ஓஜாஸ் பிரவின், 18வது (695) இடம் பிடித்தனர். ஒட்டுமொத்தமாக இணைந்து 2090 புள்ளி எடுத்து, அணிகளுக்கான பிரிவில் நான்காவது இடம் பெற்றனர். காலிறுதியில் இந்தியா ஆண்கள் அணி, குவாட்டமலா அணியை சந்திக்க உள்ளது.

Advertisement