டென்னிஸ்: ராஷ்மிகா கலக்கல்

புனே: பெண்கள் அணிகளுக்கான 'பில்லி ஜீன் கிங்' சர்வதேச டென்னிஸ் தொடரின் 62வது நடக்கிறது. இதன் ஆசிய, ஓசியானா மண்டல, குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. தவிர தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன. முதல் போட்டியில் இந்திய அணி 1-2 என நியூசிலாந்திடம் தோற்றது.
நேற்று இரண்டாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தாய்லாந்தின் லன்லனாவை சந்தித்தார். முதல் செட்டை 6-2 என வென்ற ராஷ்மிகா, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராஷ்மிகா 6-2, 6-4 என வெற்றி பெற்றார்.
அடுத்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சஹாஜா, தாய்லாந்தின் மனன்சயா மோதினர். இதில் சஹாஜா, 3-6, 7-6, 0-1 என இருந்த போது, போட்டியில் இருந்து விலகினார். இதனால் தாய்லாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஸ்கோர் 1-1 என சமனில் இருந்தது.
* பின் நடந்த பெண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி, தாய்லாந்தின் பியாங்டர்ன், தசாபர்ன் ஜோடியை சந்தித்தது.

Advertisement