டூவீலரில் பஸ் மோதி கணவன், மனைவி பலி

செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே டூவீலரில் சென்ற கணவர் ,மனைவி தனியார் பஸ் மோதி இறந்தனர்.

சாணார்பட்டி அருகே தவசிமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி மரியராஜ் 52, மனைவி எமிலி சகாயராணி 48, உடன் வக்கம்பட்டி அருகே உள்ள பேக்கரியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இருவரும் நேற்று அதிகாலை டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) திண்டுக்கல் நோக்கி சென்ற போது தனியார் பஸ் மோதியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எமிலி சகாயராணி இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரியராஜ் இறந்தார். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

-

Advertisement