நந்தி மலையில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்!

வரலாற்று பிரசித்தி பெற்ற நந்தி மலையில், உள் நாட்டு விளையாட்டுகளை ஏற்பாடு செய்கின்றனர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
சிக்கபல்லாபூரின் நந்திமலை வரலாற்று பிரசித்தி பெற்றது. கர்நாடகாவிலேயே மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
வெளி மாநிலங்கள், நாடுகளின் மக்களை தன் வசம் இழுக்கிறது. இதை மனதில் கொண்டு, மாநில அரசு பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்கிறது.
ஆர்வம்
தற்போது கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.
நந்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணியர், நீண்ட நேரம் பொழுது போக்கும் வகையில், உள் நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட ஏற்பாடு செய்கிறது. இந்த விளையாட்டுகள் சுற்றுலா பயணியரை குஷிப்படுத்துகின்றன.
சிறார்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், மூத்த குடிமக்கள் இயற்கையை ரசிப்பதுடன், விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர்.
நந்தி மலையில் உள்ள கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷனின் மயூரா விடுதி, யோக நந்தீஸ்வரர் கோவில் முன் பகுதியில் உள்ள காலியிடத்தில் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. கில்லி தாண்டு, பகடை, தாயம், பல்லாங்குழி உட்பட 40 விதமான விளையாட்டுகளை ஆர்வமுடன் ஆடுகின்றனர்.
இது குறித்து, சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியதாவது:
வரவேற்பு
சிறார்களை குறி வைத்து, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் பெரியவர்களும் விளையாட விரும்பியதால், அவர்களுக்கு தகுந்தபடி விளையாட்டுகள் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் விளையாட்டு அனுபவங்களை எழுதுகின்றனர்.
விளையாட்டுகள் சிறார்களின் திறமையை வளர்க்கிறது. தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், தங்கள் ஊரின் விளையாட்டுகள் குறித்து தகவல்களை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்கின்றனர்.
நந்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணியர், விளையாட்டுகள் குறித்து பாராட்டுகின்றனர். வெளிநாட்டவரும், நம் நாட்டினரும் இணைந்து விளையாடுவதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.
மேலும்
-
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
-
நாடு முழுவதும் டோல்கேட்டில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலா? மத்திய அரசு விளக்கம்
-
அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
-
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை