மக்கள் எதிர்பார்க்கும் நிர்வாகத்தை வழங்குவோம்: அண்ணாமலை

சென்னை: ஊழல் நிறைந்த தி.மு.க., அரசை வேரோடு அகற்ற தே.ஜ., கூட்டணி ஒருங்கிணைந்து செயல்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை உறுதி செய்தார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊழலை நிறுவனமயமாக்கி உள்ள தி.மு.க., ஒரு சிலருக்கு பலனளிக்கும் வகையில் ஒவ்வொரு நிர்வாக அமைப்பிலும் ஊழல் செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது போல், 2026 சட்டசபை தேர்தலில் ஊழல் நிறைந்த தி.மு.க., அரசை வேரோடு அகற்றி, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தமிழக மக்களுக்கு உண்மையான சேவையை மீட்டெடுப்பதற்காக அதிமுக, பாஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும்.
மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிர்வாகத்தை வழங்குவோம். அதற்கு தமிழக மக்கள் தகுதி பெற்றவர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.





