இந்தியாவிடம் வீழ்ந்தது சீனதைபே: 'பில்லி ஜீன் கிங்' டென்னிசில்

புனே: 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் லீக் போட்டியில் இந்திய அணி, சீனதைபே அணியை வீழ்த்தியது.
பெண்கள் அணிகளுக்கான 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் நடக்கிறது. புனேயில், 'ஆசிய-ஓசியானா' குரூப்-1 போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி, தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளுடன் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, அடுத்த இரு போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங்கை வென்றது.
நான்காவது போட்டியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, சீனதைபேயின் ஆன் லின் பாங் மோதினர். அபாரமாக ஆடிய வைதேகி 6-2, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 6-2, 7-6 என சீனதைபேயின் ஜோனா கார்லாண்ட்டை தோற்கடித்தார்.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா ஜோடி தோல்வியடைந்தது. இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது.
மேலும்
-
எலான் மஸ்க் உடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
14 ஆண்டு கால பண மோசடி வழக்கில் ஜெகன் மோகனின் சொத்துகள் முடக்கம்
-
மகளிருக்கான 'பிங்க் ஆட்டோ'வை ஓட்டும் ஆண்கள் * அரசின் நோக்கம் சிதைப்பா?
-
கூடுதலாக கடன் தொகை வசூல் வங்கிக்கு ரூ.20 லட்சம் அபராதம்
-
புதிதாக 100 சிற்றுந்துகள் தயாரிக்கிறது எம்.டி.சி.,
-
மே 1ல் செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு