பில்லியர்ட்ஸ்: பைனலில் அத்வானி

கார்லோவ்: சர்வதேச பில்லியர்ட்ஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் பங்கஜ் அத்வானி முன்னேறினார்.

அயர்லாந்தில், 'வேர்ல்டு மேட்ச்பிளே பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்' நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, ஸ்ரீகிருஷ்ணா சூரி மோதினர். சென்னையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா சூரி, ஒருகட்டத்தில் 5-5 என சமநிலையில் இருந்தார். பின் எழுச்சி கண்ட அத்வானி 7-5 (100--0, 100--0, 100--6, 47--100, 100--4, 64--100, 81--100, 100--11, 12--100, 8--100, 100--7, 100--0) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்தின் டேவிட் காசியர் 7-2 என (100--4, 84--100, 100--38, 2--100, 100--2, 100--14, 100--55, 100--4, 100--20) சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்ட்டை தோற்கடித்தார். பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கரில் 28 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அத்வானி, பைனலில் டேவிட் காசியரை எதிர்கொள்கிறார்.

Advertisement