கல்லுாரி ஆண்டு விழா

உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியின் 69 வது ஆண்டு விழா கல்லுாரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமையில் நடந்தது.

ஆட்சி மன்றகுழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார், முதல்வர் எச். முகமது மீரான் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ' மிகவும் பழமையான கல்லூரியாகும். இங்கு படிக்கும் மாணவர்கள் கல்லூரி கல்விக்கு பின், உயர் பதவிகள் பெற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பணியாற்ற உறுதியேற்க வேண்டும்,' என்றார்.

நிகழ்ச்சியில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் , மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement