தெருநாய் கடித்த ஒரகடம் சிறுவன் பலி ரேபிஸ் பாதிப்பில்லை என அதிகாரி விளக்கம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில் உள்ள ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் விஸ்வா, 13. அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, பிற்பகல் 12:00 மணியளவில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த விஸ்வாவை, அவரது வலது கையில் தெருநாய் கடித்துள்ளது. இதில், காயம் ஏற்பட்டு, ரெட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, 10ம் தேதி, தலைவலி, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டதால், மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
பின், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, 10ம் தேதி இரவு 11:00 மணியளவில் உயிரிழந்தார். சிறுவன் இறந்தது பற்றி அவரது தந்தை, ஒரகடம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாய் கடித்த மூன்று நாட்களில் சிறுவன் இறந்தது பற்றி, மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 7ம் தேதி முதல் தவணை, 10ம் தேதி இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டது. சிறுவனுக்கு ஏற்கனவே என்ன பிரச்னை இருந்தது என தெரியவில்லை.
ஆனால், 99 சதவீதம் ரேபிஸ் இருக்க வாய்ப்பில்லை. பிரேத பரிசோதனையில் வேறு ஏதேனும் காரணமா என, தெரியவரும். ரேபிஸ் அறிகுறி எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்; தெற்கு ரயில்வே புது அறிவிப்பு
-
டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: சீமான் 'கலகல'
-
ராஜஸ்தானில் சோகம்; கார்- லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்
-
கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம்' ஏழு பேர் கைது; ரூ. 1.09 கோடி, கார் பறிமுதல்
-
திருமூர்த்திமலையில் சுற்றுலா பயணியர் குஷி