சிறுபான்மையினர் நலன் குறித்த உங்கள் வரலாற்றை பாருங்கள்: பாக்.,கிற்கு இந்தியா கண்டனம்

1

புதுடில்லி: '' இந்திய பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்தச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில், 'முஸ்லிம்களிடம் இருந்து மசூதிகள் உள்ளிட்ட சொத்துகளை பறிக்கவும் அவர்களை ஓரங்கட்டவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்து இருந்தது.


இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்திய பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டம் தொடர்பாக பாகிஸ்தான் உள்நோக்கத்துடன் மற்றும் ஆதாரமற்ற வகையில் தெரிவித்த கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் மற்றவர்களுக்கு போதிப்பதை விட, அதன் சொந்த வரலாற்றை பார்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்

Advertisement